LOADING

Type to search

சினிமா

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்த “ராமாயணா” படத்தின் கதாபாத்திர பதிவேற்றம்

Share

இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம், இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற 2 இசையமைப்பாளர்கள் பணியாற்றுவதுதான். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும், லயன் கிங், கிளாடியேட்டர் இன்டர்ஸ்டெல்லார் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்கள் இருவருமே தலா 2 ஆஸ்கார் விருதுகளை வென்றவர்கள் ஆவர். இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாச திரைப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானுடன், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘ராமாயணா’ படத்தின் முதல் துள்ளல் காணொளி கடந்த ஜனவரியில் படக்குழு வெளியிட்டது. இந்த கிளிம்ப்ஸ் காணொளியில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரது காட்சிகளும், பின்னர் ராமர் மற்றும் ராவணன் சண்டையிடும் ஒரு காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும் அனுமனாக நடித்துள்ள சன்னி தியோல் தோன்றும் காட்சியும் இடம்பெற்றது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ‘ராமர்’ கதாபாத்திரத்தின் துள்ளல் காணொளி அனுமன் ஜெயந்தியான ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.