மார்க்கம் நகரில் அதிகளவு தமிழ்க் கனடியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி அவர்கள்!
Share
கடந்த 30-03-2026 திங்கட்கிழமையன்று ஒன்றாரியோ- மார்க்கம் நகரில் நடைபெற்ற முக்கிய ஆளும் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி அவர்கள்அதிகளவு தமிழ்க் கனடியர்கள் கலந்து கொண்டது தொடர்பாக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
. மேற்படி விசேட கூட்டத்தை எமது பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் மற்றும் மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிம் ஹொக்டன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மா அவர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டம் ஒரு வார காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது என்று அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய கனடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் பியர் பொய்லியே அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து எமது ஆளும் கட்சிக்கு மாறிய பிறகு, பாராளுமன்ற உறுப்பினர் மா அவர்கள் தங்கள் அணியில் வரவேற்பதில் லிபரல் கட்சியினர் “மகிழ்ச்சி” அடைவதாகஎ கூறினார். அத்துடன் விரைவில் நடைபெறவுள்ள சில இடைத்தேர்தல்களில் எமது கட்சிக்கு கிடைக்கும் வெற்றிகள் பெரும்பான்மை அரசாங்கத்தை தொடர்ந்து நடத்திச் சென்று கனடியர்களுக்கு சிறந்த சேவையாற்றும் சந்தர்ப்பத்தை தரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அத்துடன் ரொறன்ரோ பெரும்பாகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலான ஸ்காபுறோ தென்மேற்கு தொகுதியில் எமது கட்சி சார்பில் போட்டியிடும் டொலி பேகம் அவர்களை வெற்றிபெறச் செய்ய சபையில் கூடியிருக்கும் அனைவரும் தங்கள் நேரத்தைச் செலவு செய்து பிரச்சாரத் தளத்தில் சென்று பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அன்றைய 30ம் திகதி திங்கட்கிழமை கனடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் ரொறன்ரோ பெரும்பாகத்தில்
மேற்படி கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பின்னர் சபையோரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தில், கனடா உதயன் பத்திரிகையின் அண்மைய பிரதியொன்றில் பிரதமர் பற்றியும் அவரது அரசாங்கம் பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த முன்பக்கச் செய்தியை ‘கனடா உதயன்’ பிரதம ஆசிரியர் அவருக்கு காட்டிய போது மகிழ்ச்சியோடு பத்திரிகைப் பிரதியை கைகளில் வைத்திருந்த வண்ணம் புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுப்தை இ ங்குள்ள படங்களில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





















