LOADING

Type to search

இந்திய அரசியல்

விஜய் பேச்சு அறியாமையை காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Share

சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் களை கட்டியுள்ளது. முக்கிய தலைவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையேதான் போட்டி என்று கூறும் விஜய் கூறுவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த, எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது அவரது பேச்சு அறியாமையை காட்டுகிறது. விஜய்யின் பேச்சு பற்றி அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். அதிமுக மக்களின் நன்மதிப்பு பெற்ற கட்சியாக உள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிராகசமாக உள்ளது. 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தேமுதிகவிற்கு 2026-ல்தான் எம்.பி சீட் கொடுப்போம் என்று சொன்னேன். அவர்களின் மனநிலை வேறு மாதிரியாக இருந்தது. கூட்டணி மாறிவிட்டார்கள்” என்றார்.