அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
Share
அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தை கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார். அட்லீக்கு இது 6ஆவது படமாகும். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லி இணைந்துள்ள படத்தின் பதிவேற்றம் காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. பதாகையை பார்க்கும் போது அல்லு அர்ஜுன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.















