LOADING

Type to search

சினிமா

‘எல்ஐகே’ படம் முதல் நாளில் ரூ.9.93 கோடி வசூல்

Share

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக பல தடைகளை கடந்து இறுதியாக நேற்று திரையரங்குகளில் வெளியானது. லவ், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதல் நாளில் உலகளவில் ரூ.9.93 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.6.85 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இதன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.