LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம்- தொல்புரம் பகுதியில் இளைஞர் கொலை தொடர்பாக நால்வரை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸ்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணமட் . தொல்புரம் பகுதியில் இளைஞர் கொலை – நால்வரை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸஸார் அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 12ம்; திகதி ஞாயிற்றுக்கிழமை அனறிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அன்றிரவு தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கு.மயூரன் என்பவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், மற்றைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பிரதான சந்தேகநபரான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் உட்பட நால்வரையும் வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.