LOADING

Type to search

சினிமா

பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே” படத்தின் “தீமா” காணொளி பாடல் வெளியானது

Share

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லவ், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ‘எல்ஐகே’ திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.40 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்நிலையில், ‘எல்ஐகே’ படத்தின் ‘தீமா’ காணொளி பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத் பாடியுள்ளார்.