LOADING

Type to search

இலங்கை அரசியல்

அரசாங்க அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக விபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ள மரத்தின் அடி பாகம் அவரின் கண்களுக்குத் தெரியவில்லையா?

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, A-9 வீதியில் நின்ற மரமானது அண்மையில் வெட்டப்பட்டது.

வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக உயர்ந்து காணப்படுகிறது.

இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த மரத்தின் அடி பகுதியை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ள மரத்தின் அடி பாகம் அரசாங்க அதிபரின் கண்களுக்குத் தெரியவில்லையா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.