LOADING

Type to search

இந்திய அரசியல்

தொகுதி மறுவரையறை ஜனநாயகத்திற்கு குழி தோண்டும் முயற்சி – கி.வீரமணி

Share

சென்னையில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய அளவில் என்றைக்கும் இந்தி பேசும் பிரதமர் தான் வரமுடியும் என்று வைத்திருப்பதை எதிர்ப்பு காட்டும் வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தமிழகம் மற்றும், மேற்கு வங்காள மாநிலங்களில் இன்னும் தேர்தல் முடியாமல் இருக்கிறது. இந்நேரத்தில் இந்த தொகுதி மறுவரையறை கொண்டுவருவது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ளவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கொண்டுவருகிறார்கள். இது வெறும் தொகுதி மறுவரையறை பிரச்சினை மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை துழைத்து ஜனநாயகத்திற்கு குழி தோண்டும் செயலாகும். இந்த கண்ணி வெடிகளை கண்டறிந்து எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு முன்னோட்டமாக இருக்கிறது. தேர்தல் என்பதை ஒரு பெரிய போராட்டமாக மாற்றும் செயலாக ஒன்றிய அரசு இருந்து வருகிறது. இந்தியாவில் இனி கூட்டாட்சி இருக்காது, ஒற்றை ஆட்சி தான் இருக்கும். மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்காகத்தான் இந்த கருப்பு கொடி போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.