LOADING

Type to search

கனடா அரசியல்

*கனடா வாழ் படைப்பாளி ‘அகணி சுரேஸ்’ அவர்களின் எட்டு நூல்கள் வெளியிடப்பெற்ற இலக்கியப் பெருவிழா!

Share

*கலந்து கொண்டவர்களில் மேடையில் கௌரவிக்கப்பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட பல்துறைக் கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் வியந்து மகிழ்ந்த நாள்!

*கனடா வாழ் படைப்பாளியும் பொறியியலாளருமான ‘அகணி சுரேஸ்’ அவர்களின் எட்டு நூல்கள் வெளியிடப்பெற்ற இலக்கியப் பெருவிழா மற்றும் இசைப்பாடல் தயாரிப்பில் பங்களித்த கலைஞர்களிற்கான கௌரவிப்பு படைப்புக்களின் வெளியீடு மற்றும் அறிமுக உரைகள் வாழ்த்துரைகள் ஆகியன இடம்’பெற்ற மேற்படி இலக்கியப் பெருவிழா கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை ஒரு ‘முழுநாள் கொண்டாட்டமாக’ ஸ்காபுறோ மாநகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அன்பும் அக்கறையும் பண்பும் பாசமுமாக அனைத்து உணர்வுகளும் பகிரப்பெற்ற அந்த நீண்ட மணித்துளிகள் அனைவருக்கும் நிறைவைத் தந்தன என்றால் மிகையாகாது.

இலக்கியத்திற்காகவும் இசைக்காகவும் தமிழின்பத்திற்காகவும் அங்கு கூடிய நூற்றுக்கணக்கானவர்கள் அனைவரும்’ இந்த விழா- எமது விழா’ என்னும் உற்சாகத்தோடு அன்றைய நாளைக் களித்தும் கழித்தும் சென்றார்கள் என்று குறிப்பிடுவது இங்கு சாலப்பொருத்தமான ஒன்றாகும்

அங்கு இடம்பெற்ற சிறப்பம்சங்களில் விழாவிற்கு அழைக்கப்பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களில் மேடைக்கு அழைக்கப்பெற்று நூலாசிரியராலும் பிரமுகர்களினாலும் கௌரவிக்கப்பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட பல்துறைக் கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் தாங்களும் மகிழ்ந்து ஏனையோரையும் வாழ்த்திச் சென்ற அந்த நெருக்கமான தருணங்கள் பரவசத்தை ஏற்படுத்தியவையாக அமைந்தன.

‘அகணி சுரேஷ்’ எனும்’ கனடா வாழ் அற்புதமான இலக்கியவாதியை பற்றிக் கேள்விப்படாதவர்கள் கனடாவில் மாத்திரமல்ல ஏனைய புலம் பெயர் நாடுகளிலும் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.
இவ்வாறான பன்முக ஆற்றல் கொண்ட அவரது படைப்புக்கள் சார்ந்தும், தலைமைத்துவப் பண்புகள் சார்ந்தும் அவரோடு நெருக்கமாகப் பழகி நேசிப்போடு நட்பு கொண்டாடுகின்றவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்.

அதனையும் தாண்டி. முத்தமிழுக்கும் அ ப்பால் எவையெல்லாம் மறைந்திருக்கின்றனவோ அவற்றையெல்லாம் ‘முத்துக்குழிக்கும்’ வகையில் ஆழத்திற்குச் சென்று பற்றிக் கொள்கின்ற ஒரு பெருந்தகை.

அவர் குடிசார் பொறியியல் மற்றும் கணணித்துறை ஆகியவற்றில் முதுமானிப் பட்டங்களைப்பெற்றவர

மேற்படி விழா இடம்பெற்ற முழு நாளும் உரைகளும் உபசாரங்களும் கௌரவிப்புகளும் பாராட்டுகள் பகிரப்பெற்றும் உரையாடி மகிழ்ந்தும் என மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவு தருகின்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பெற்றிருந்தமை விழாவை ஏற்பாடு செய்த அகணி சுரேஷ்’ என்னும் ‘அற்புதமான இலக்கியவாதியின் குடும்பம் மற்றும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவர்கள் மற்றும் கனடா தமிழ்க் கவிஞர்கள் கழகத்தின் அங்கத்தவர்கள் மற்றும் இலக்கிய அபிமானிகள் என பலரும் காரணமாக விளங்கினார்கள் என்பதே இங்கு கவனித்தக்கதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவின் ‘முதன்மை விருந்தினராக பேராசிரியர் பாலசுந்தரம் அழைக்கப்பெற்றிருந்தார் என்பதும் கவிஞர் கணபதிப்பிள்ளை குமரகுரு மற்றும் ஒலிபரப்பாளரும் பேச்சாளருமான ஜோதி ஜெயக்குமார் ஆகியோர் தொகுப்பாளராக பணியாற்றிமையும் குறிப்பிடத்தக்க கவனத்தை, கலந்து கொண்டவர்களுக்கு ஏற்படுத்தியது என்பதும் அன்றை விழாத் தலைமையை அகணி சுரேஷ்’ அவர்களின் புதல்வி சட்டத்தரணி சயனிகா சுரேஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டமையும் சிறப்புக்குரிய பங்களிப்பாக விளங்கியது என்பதும் இறுதியாக இந்த பதிவில் குறிப்பிடுவது அவசியமாகின்றது-

மலையன்பன்