மகத்தான வெற்றியை நோக்கி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் – அண்ணாமலை
Share
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இன்றைய தினம், குன்றெல்லாம் அருளும் முருகப்பெருமான் ஆண்டியாகவும், அரசனாகவும் அருள்பாலிக்கும் பழனி சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் ரவி மனோகரன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். ஆண்டிற்கு ரூ.200 கோடி வருமானம் ஈட்டும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,500 கோடி. இருந்தும், பழனி பகுதியை மேம்படுத்தாமல், குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு. தூய்மையான நகரங்கள் பட்டியலில் 585வது இடத்தில் பழனி இருப்பது வேதனைக்குரியது.
தமிழகத்தில் உள்ள ஊழல் குடும்பங்கள் பட்டியலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குடும்பத்திற்கு பிறகு, ஐ.பெரியசாமி குடும்பம் இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லும் பயத்தில் இருவரும் இருக்கிறார்கள். விலைபோகாத மாட்டை வெளிசந்தைக்கு தள்ளி விடுவது போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக, பழனிக்கு அனுப்பியுள்ளது. அவர்களுக்கு படுதோல்வியை பரிசளிக்க பழனி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
கந்தன் அருளும் பழனியின் பெருமையை மீட்டெடுக்கவும், தமிழகத்தில் ஆன்மீக பெருமையை மீட்டெடுக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் ரவி மனோகரன் பழனி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லட்டும்! பழனியின் பெருமை மீளட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்தார்.















