LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைனில் 10 ஆயிரம் அரிய கலைப்பொருட்கள் மாயம் – ரஷியா

Share

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள கலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்கா முதல் ஜப்பான் வரையிலான சுமார் 14 ஆயிரம் அரிய படைப்புகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிலைகளை ரஷியப் படைகள் லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளன. உக்ரைன் படைகள் மீண்டும் இப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு அருங்காட்சியகத்துக்குள் சென்ற அதன் இச்யக்குநர் அலினா டோட்சென்கோ, காலி அலமாரிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். “வெற்று அறைகளைப் பார்த்ததும் என் கால்கள் தளர்ந்துவிட்டன, ஒரு குழந்தையைப் போல சுவரோரம் அமர்ந்து அழுதுவிட்டேன்” என அவர் வேதனையுடன் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக, போருக்கு முன்பே அவர் அனைத்து கலைப் பொருட்களையும் டிஜிட்டல் முறையில் புகைப்படம் எடுத்து அந்த தரவுகளை மறைத்து வைத்திருந்தார். தற்போது அந்த ஆதாரங்களைக் கொண்டு, சர்வதேச காவல்துறை உதவியுடன் மாயமான கலைப்பொருட்களை மீட்கும் முயற்சியில் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது.