‘இது சினிமா படப்பிடிப்பு அல்ல..’ – வாக்கு செலுத்திய பிறகு நடிகை சிம்ரன் வெளியிட்ட பதிவு
Share
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று காலை முதலே திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், விக்ரம், தனுஷ், ஜீவா, துருவ் விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் தங்களது வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில் தனது வாக்குப்பதிவினை செலுத்திய நடிகை சிம்ரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பாதவது:- நாடகங்களைத் தவிர்த்து, யதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம். இது ஒரு வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு அல்ல. நாம் வாக்களிக்கும்போது அனைவரும் ஒன்றே. வாக்களிப்பது என் உரிமை மட்டுமல்ல, அது என் பொறுப்பும் கூட. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது















