LOADING

Type to search

இந்திய அரசியல்

சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு எதுவும் கூடவில்லை – திருமாவளவன் பேட்டி

Share

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடைபெற்றுள்ளது. இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. எஸ்.ஐ.ஆர். மூலமாக ஏராளமான வாக்குகள், லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வாக்குகள் நீக்கப்படாமல் இருந்து, இந்த அளவு வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தால் பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்றுதான் நாம் பேசியிருப்போம். ஆனால் எஸ்.ஐ.ஆர். மூலம் எண்ணிக்கையில் மட்டுமே இருந்த வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதால், இப்போது கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியிருப்பதுபோல ஒரு தோற்றம் உள்ளது. இதில் உண்மையில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய வாக்காளர்கள் சேருவார்கள். அதேபோல இந்த தேர்தலிலும் 20 ல் இருந்து 25 லட்சம் வாக்காளர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான். இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்,” என்றார்.