LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சீனா பயணம்

Share

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று சீனா செல்கிறார். இந்த பயணத்தின்போது பாகிஸ்தான்-சீனா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து சீன அரசுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் பாகிஸ்தான் செல்லும் ஆசிப் அலி சர்தாரி, வரும் 27-ந்தேதி வரை சங்ஷா, ஹுனான் ஆகிய மாகாணங்களுக்கும், தொடர்ந்து 28-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை சன்யா, ஹைனான் ஆகிய மாகாணங்களுக்கும் செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-சீனாவும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அதிபரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், ஈரான்-அமெரிக்கா இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த பயணத்தை பாகிஸ்தான் அதிபர் மேற்கொண்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.