மரண அறிவித்தல் | திருமதி. தனலட்சுமி (ராசு) நடேஸ்வரன்
Share
(கரம்பன் கிழக்கு காளிகோவிலடி- ஊர்காவற்றுறை)
அன்னை அழைப்பில்:17-10-1947
ஆண்டவன் அழைப்பில்: 25-04-2026
ஊர்காவற்றுறை. கரம்பன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மற்றும் கனடா மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி நடேஸ்வரன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று மிசிசாகாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-பகவதியம்மா தம்பதியின்; அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்-நாகம்மா தம்பதியின் அன்பு மருமகளும்.
காலஞ்சென்ற நடேஸ்வரன் (அத்தார்) அவர்களின் அன்புத் துணைவியாரும்
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், குமரகுருபரன், உருத்திரசீலன் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி (நாகேஸ்வரி.லண்டன்), மற்றும் காலஞ்சென்ற குகதாஸ் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
;நிதிதாஸ் (லண்டன்),நித்தியலட்சுமி( நித்தியா -கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும், ஜெயமலர் (லண்டன்), சிவதாஸ் (சிவா -கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உதயச்சந்திரன்- சீதாலட்சுமி, சுப்பிரமணியம்- கமலவேணி ஆகியோரின் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நவரத்தினம் மற்றும் பத்மராணி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன் மற்றும் காலஞ்சென்றவர்களான கன்னிகா பரமேஸ்வரி. திலகமணி, நவரட்ணதேவி, இராஜகோபலன் மற்றும் பிருந்தாதேவி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, மற்றும் கனகலிங்கம் ஆகியோரின் சகலியும்
வர்ஷன், அதிஸ்ரன், நேர்த்திரன், துருவனன் ஆகியோரின அருமை அப்பம்மாவும், ஸ்ரீவத்தனின் அருமை அம்மம்மாவுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை 737 Dundas Street East MISSISSAUGA, ON L4Y 2B5 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள St John’s Dixie மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பெற்று பின்னர் அடுத்த நாள் திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணிவரை அதே St John’s Dixie மண்டபத்தில் கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து தகனக்கிரியைகள் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
நிதிதாஸ் (நிதி, மகன- லண்டன்;) 0044 78 24 394821
சிவதாசன் (சிவா, மருமகன்) 1 647 406 4848















