தன்மானத் தலைவனைப் பாடிய கருங்குயில் விண்தேடிப் பறந்தது!
Share
தயாபரன்- கனடா
பண்பாடிய குயிலொன்று
விண் தேடிப் பறந்தது….. தமிழ்ப்
பண்பாடிய இசையொன்று
மண்ணோடு கலந்தது….
தலைமகன் வீரத்தையும்..
தாய்j; தமிழன்னை…. அழகையும்
மெருகோடு பருகி
தமிழ் மேன்மையை ருசித்தது…
தன்மானத் தலைவனையே
எப்போதும் பாடியது
தமிழன்னை பெற்றமகன்
புகழ்பாடி மலர்ந்தது
இனமானத் தமிழன் நிலைகண்டு
அடிநெஞ்சில் வெடித்தது
தமிழ்தேசம் சென்றுவர
நாள் பலவாய் துடித்தது
தமிழ்தேசம் விடியும் என
நெடுங்காலம் தவித்தது
புலிவீரர் தனைக்கான
பெருந்தவமொன்று இருந்தது
தலைவன் நெஞ்சருகே கூடுகட்ட அலைந்தது
வெறுங்கனவோடு நாள்முழுதும்
இடிமுழங்க அழுதது
கவலையொன்றும் கொள்ளாதே
தமிழ்க் கருங்குயிலே!
உன் வருகைக்காக காத்திருக்கும் தலைமகன் கை பற்றி
உன் ஆசை தீர்ந்திடவே
தலைவனருகில் நிரந்தரமாய் அமர்ந்து
தவிதவிக்கும் அவன் நெஞ்சில்
மகிழ்வோடு உறங்கிவிடுக!















