ராம் சரணின் ‘பெத்தி’ பட வெளியீடு தேதி அறிவிப்பு
Share
புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் பெத்தி. ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர் மற்றும் ஆயிஷா கான் ஆகியோர் ஒரு சிறப்பு பாடலில் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 4ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.















