LOADING

Type to search

இலங்கை அரசியல்

மானிப்பாய் பிரதேச சபையினால் இரண்டாம் கட்ட பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டம்!

Share

வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஏற்பாட்டில் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டமானது கடந்தவாரம் உயரப்புலம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5ம் திகதி அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

பாதீனியமானது சுவாசம் சம்பந்தமான பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடியது என்ற வகையிலேயே அதனை ஒழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய வேலைத்திட்டத்தில் மானிப்பாய் பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள், கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.