இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கல்!
Share
மன்னார் நிருபர்
(14-05-2026)
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான 14ம் திகதி அன்று வியாழக்கிழமை (14) மன்னார் நானாட்டான் பகுதியில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நானாட்டான் பகுதியில் வியாழக்கிழமை அன்று (14) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது.
இதன் போது மத தலைவர்கள் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அதே போன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அங்குள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் அன்று மூன்றாம் நாள் நினைவேந்தல் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















