Being a Police Officer is not just a job, it involves many social responsibilities. – MPP Logan Kanapathi காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவது ஒரு தொழில் மாத்திரமல்ல , சமூகம் சார்ந்த பல பணிகள் அடங்கியது- மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி
Share
காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவது ஒரு தொழில் மாத்திரமல்ல , சமூகம் சார்ந்த பல பணிகள் அடங்கியது- மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி
“ஒரு காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவது என்பது ஒரு தொழில் மாத்திரமல்ல . அது சமூகம் சார்ந்த பல பணிகள் அடங்கியது. அத்துடன் காவல்துறையில் எம்மை நாம் இணைத்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம். அவ்வாறான ஒரு அற்புதமான பணி காவல்துறையாகும். அதன் மூலம் சமூகத்துடனும் சமூகத் தலைவர்களுடனும் இணைந்து பயணிப்பதால் நாம் ஒரு அர்த்தமுள்ள பாதையை எமது முக்கியமான பருவத்தில் தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற திருப்தியும் எமக்கு கிட்டுகின்றது”
இவ்வாறு ஒன்றாரியோ மாகாண அரசின் மார்க்கம்- தோர்ண்ஹில் தொகுதியின் உறுப்பினரும் முக்கிய அமைச்சொன்றின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி தெரிவித்தார்.
கடந்த 08-05-2026 அன்று சனிக்கிழமை காலை மார்க்கம் நகரில் உள்ள மிலிக்கன் மில்ஸ் சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற யோர்க் பிராந்திய காவல்துறை தலைமைப் பீடத்தோடு இணைந்து நடத்திய ‘காவல்துறையில் இணைந்து கொள்வது எப்படி?’ என்னும் தலைப்பிலான மக்கள் அமர்வில் தொடக்கவுரையாற்றிய லோகன் கணபதி தெரிவித்தார். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் காவல்துறையில் இணைந்து பணியாற்றி விருப்பம் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் அங்கு ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
அங்கு மாகாண அரசின் உ றுப்பினர் லோகன் கணபதி அவர்கள் தொடர்ந்த உரையாற்றுகையில்
காவல்துறை உ த்தியோகத்தராக பணியாற்றுவதன் மூலம் எமது ஆற்றலையும் அறிவையும் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திருப்த்தியும் கிட்டுகின்றது.
மேலும். முன்னரெல்லாம் காவல்துறையில் இணைந்து கொள்வதற்கு கனடாவில் பல்கலைக் கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று எண்ணுகின்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்காக கல்லூரி கற்கையை மாத்திரம் பூர்த்தி செய்து ◌கொண்டு சமூகம் சார்ந்து பயணிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் ஒரு அரிய வாய்ப்பாகவும் இது அமைகின்றது” என்றார்.
அங்கு காவல்துறையின் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட காவல்துறை அத்தியட்சகர் சிரேக் பாஹ்ட் மற்றும் தமிழ்க்குடும்பங்கள் சார்ந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பல இளைஞர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களையும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கையளித்தார்கள்.
“Policing is also a meaningful pathway to travel together with society and community leaders. Being a police officer is not just a job, it involves many social responsibilities. It is a wonderful field that can make a difference in the lives of people in society”. Markham-Thornhill MPP Logan Kanapathi


















