LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜயுடன் ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் குழு சந்திப்பு

Share

 தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில், தமிழ்நாட்டின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், ராம்கோ குழுமம் தமிழ்நாட்டில் மேற்கொண்டுவரும் பல்துறை சார்ந்த தொழில் செயல்பாடுகள் மற்றும் அந்நிறுவனத்தின் தொடர் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் ராம்கோ குழுமம் நீண்டகாலமாக வழங்கி வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டினார்கள், மேலும், தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தி, மாநிலத்துடன் ராம்கோ குழுமம் தமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில், ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அபிநவ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.