LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான் விரைந்து செயல்படுவது நல்லது – டிரம்ப்

Share

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் மூத்த தலைவர்கள், தளப திகளை கொலை செய்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சுமார் 40 நாட்கள் நீடித்த போர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கு நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் பேரில் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. ஆனால் ஈரானின் கடற்பகுதி முற்றுகை, ஹார்முஸ் நீரிணை மூடல் உள் ளிட்ட பிரச்சினைகளால் இன்னும் அமைதி ஒப்பந்தம் எட்ட முடியவில்லை. இதனால் வளைகுடா பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தநிலையில், டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ என்ற எக்ஸ் தள கணக்குப் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ‘ஈரானைப் பொறுத்தவரை நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைந்து செயல்படுவது மிகவும் நல்லது. இல்லையெனில், அவர்களைப் பற்றிய அடையாளமே உலக வரைபடத்தில் இருக்காது. நேரம் மிகவும் முக்கியமானது என அதில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஈரானை சுற்றி வளைத்தது போன்று, உலக வரைபடத்தில் அந்நாட்டை அம்புக்குறியிட்டு இலக்காக நிர்ணயித்தது போன்ற போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அரபு நாடுகள் தங்களின் ஆதரவு நாடுகள் என்பதைப் போல், அமெரிக்கக் கொடி வர்ணத்தில் அந்தப் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட பதிவில், ‘இது புயலுக்கு முந்தைய அமைதி’ என பதிவு ஒன்றை வெளியிட்டார். அத்துடன் ‘அமெரிக் காவை மீண்டும் உயர்ந்த நிலைக்கு மாற்றுவோம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தொப்பி அணிந்து, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றில் கடற்படை அதிகாரியுடன் அவர் நிற்பது போன்ற செயற்கை நுண்ணறிவு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். டிரம்பின் இந்த மர்ம பதிவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இதன் மூலம் ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிடுகிறதோ? என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் புதிதாக போர்ப்பதற்றம் தொற்றி உள்ளது.