மட்டக்களப்பு நகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு!
Share
(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நகரில் தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் மற்றும் ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் 20ம் திகதி புதன்கிழமை (20) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது
அன்றைய தினம் ம்ட்டக்களப்பிற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் பொலிசார் மற்றும் இரவு பகலாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையிலும் கூட நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் பஸ் வண்டிகள் நிறுத்தும் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னாள் அமைந்துள்ள மேற்படி கடைகளின் பூட்டைஉடைத்து கடைகளுக்குள் திருடர்கள் உட்சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேசை இலாச்சிகளையும் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
















