LOADING

Type to search

இலங்கை அரசியல்

நீதி கோரிய ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Share

இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 17 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் மற்றம் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்றிருந்தது. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் , நில அபகரிப்புக்கு எதிராகவும் 20ம் திகதி அன்று லண்டன் பாராளுமன்றம் முன்பாக ஒன்று கூடிய புலம்பெயர் ஈழ தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்
புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை முன்னெடுத்திருந்தனர்