LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: போர் முடிவுக்கு வருமா?

Share

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. பாகிஸ்தான் தலையீட் டில் சிறிது காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அமெரிக்கா-ஈரான் இடையே சமரசம் செய்து வைக்க பாகிஸ் தான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. பாகிஸ்தானும், கத்தாரும் இணைந்து திருத்தப்பட்ட அமைதி திட்டத்தை தயாரித்துள்ளன. அதுகுறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஈரானின் 14 அம்ச திட்டம் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்து வருவ தாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாடு முற்றிலும் அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து வருகிறார். அதேநேரத்தில் யுரோனியத்தை அமெரிக்காவிடம் வழங்கும் பேச்சுக்கே இடமில்லை. எதற்கும் தயராக இருக்கிறோம் என்று ஈரான் கூறி வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரம் அடையக்கூடும் என்ற கவலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்து போர் முடிவுக்கு வருமா?.