LOADING

Type to search

இந்திய அரசியல்

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக சிக்கிம் செல்கிறார்

Share

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகிற மே 26ஆம் தேதி முதல் 3 நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 26ஆம் தேதி (செவ்வாய் கிழமை) பிற்பகல் லிபிங் ராணுவ ஹெலிபேடில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு செல்கிறார். பின்பு அங்கிருந்து லோக் பவனுக்கு செல்லும் அவர், பின்னர் காங்டாக்கில் உள்ள நாம்கியல் திபெட்டியல் ஆய்வு நிறுவனம் மற்றும் ரிட்ஜ் பார்க்கில் உள்ள ஆர்க்கிடேரியத்தை பார்வையிடுகிறார். மேலும், மே 27ஆம் தேதி (புதன் கிழமை) காலை இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் உள்ள நாதுலாவிற்கு அவர் செல்கிறார். அதனை தொடர்ந்து, சிக்கிம் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுப் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

பின்னர், மே 28ஆம் தேதி (வியாழக்கிழமை) பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும் சிக்கிம் காவல்துறை அணிவகுப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார். பின்பு அதே நாளில் அவர் சிக்கிமிலிருந்து திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.