நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதாகவும் நிலத்தடியில் பனிப்பாறை இருப்பதை கண்டுபிடித்த சந்திராயன் 2
Share
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவில் ஆய்வு மேற்கொள்ள 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியிருந்தது. விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது செயலிழந்த போதிலும், அதன் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது. இந்நிலையில் சந்திரயான் 2 ஆர்பிட்டர், நிலவின் தென்துருவத்தில் நிலத்தடி பனிப்பாறை நீர் உள்ளதற்கான தடயங்களை கண்டறிந்துள்ளது. ஆர்பிட்டர் அனுப்பியுள்ள தரவுகள் குறித்து அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவில், நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி எப்போதுமே படாத, கடுமையான குளிர்கொண்ட நிரந்தர நிழல் பிரதேசங்களின் மேற்பரப்பிற்கு அடியில் மிக அதிகமான அளவில் பனிப்பாறை வடிவ நீர் மூலக்கூறுகள் உறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
















