LOADING

Type to search

உலக அரசியல்

கிழக்கு பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்கா தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்

Share

அமெரிக்காவில் போதை கலாசாரம் மற்றும் பல்வேறு சமூக சீரழிவுகளுக்கு மூலக்காரணமாக விளங்கும் லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி வரும் படகுகள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. குறிப்பாக கிழக்கு பசிபிக் மற்றும் கரீபியன் கடல் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க கடல் பகுதிகளில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் கப்பல்களை குறிவைத்து தகர்க்கும் நடவடிக்கை, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக சுமார் 196 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதே சமயம், அந்த கப்பல்களில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை. இந்த நிலையில், கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.