LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் இடம் பிடித்துள்ள மன்னார் பேசாலை வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினிக்கு மன்னாரில் அமோக வரவேற்பு

Share

(மன்னார் நிருபர்)

(28-05-2026)

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு 28ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (28-05-2026) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த வீரரை வரவேற்றனர்.

மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் குறித்த வீராங்கனை மற்றும் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு இசை வாத்தியம் முழங்க மன்னார் பஜார் பகுதியூடாக மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த வீராங்கனையை கௌரவித்தார்.அதனைத் தொடர்ந்து குறித்த மாணவி அவரது சொந்த கிராமமான பேசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

-மன்னார் பேசாலை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற மாணவி பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவியவார்.

இவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள நிலையில் இலங்கை நியூசிலாந்து ஏ மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வீரரை கௌரவிக்கும் வகையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.