LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டிக்க தற்காலிக ஒப்பந்தம்?

Share

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடந்த ஏப்.9-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. இதனால், ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. அதன் பயனாக தற்போது போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.