பிறந்தநாளை முன்னிட்டு முதியோரிடம் ஆசிபெற்றார் நடிகை சோனா
Share
நடிகை சோனா தனது பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில் உள்ள ‘பிருந்தாவனம் முதியோர் இல்லம்’ சென்று அங்கிருந்த முதியோரிடம் ஆசி பெற்றார். முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதியோர்களைச் சந்தித்து நலம் விசாரித்தவுடன் அவர்களுக்கு உணவு, பரிசுப் பொருட்களை வழங்கினார். நடிகை சோனா ஹைடன் திரைத்துறையின் தொழில்நுட்பங்களை அறிவதில் அர்வம் உள்ளவர், அதில் ஈடுபடவும் செய்பவர். அவர் இயக்கி நடித்து அண்மையில் வெளிவந்த ‘பஜ்ராவோ மஸ்தானி’ இசை ஆல்பம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதில் சோனாவுடன் பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் பாடி நடித்திருக்கிறார். வி2 இசையமைப்பில் ஆசிஃப் கான் ஒளிப்பதிவில் இந்த ஆல்பத்தை சோனாவே இயக்கியிருந்தார். நடிகை சோனா, பிரதான வேடமிட்டு நடிக்கும் புதிய படம் தொடங்கி இருக்கிறது. புதிய படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும். தனது புதிய படம் தொடங்குவதை முன்னிட்டு தன் பிறந்தநாளில் நடிகை சோனா முதியோரிடம் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
















