ரத்ன குமாரின் “29” படம் ஜூன் 5ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது
Share
இயக்குநர் ரத்ன குமாரின் ‘29’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘29’ திரைப்படத்தை ரத்ன குமார் இயக்கியிருந்தார். படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘மேன்சன் குத்து’ பாடல் வைரலானது. இப்படம் ரூ2 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரத்ன குமாரின் ‘29’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
















