LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல் அமைச்சர் விஜய்யுடன் புதிய சட்டம் ஒழுங்கு காவலர் மகேஷ் குமார் அகர்வால் சந்தித்து வாழ்த்து பெற்றார்

Share

தமிழகத்தின் 34-வது சட்டம் ஒழுங்கு காவலராக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து  பெற்றார். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு காவலராக வெங்கடராமன் பணியாற்றி வந்தார். நிரந்தர காவலராக நியமிக்கப்படவில்லை. அதன்பின்னர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் வெங்கடராமனுக்கு பதிலாக சந்தீப்ராய் ரத்தோரை நியமித்தது. அவர் அந்தப்பொறுப்பில் பணியாற்றி வந்தார். தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய சட்டம்-ஒழுங்கு காவலர் உடனடியாக நியமிக்கப்படவில்லை. தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், சட்டம்-ஒழுங்கு  காவலராக பணியாற்றி வந்தார். புதிய சட்டம்-ஒழுங்கு காவலரை நியமிக்க தமிழக வெற்றி கழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, மகேஷ்குமார் அகர்வால் புதிய சட்டம் ஒழுங்கு காவலராக நியமனம் செய்யப்பட்டார். புதிய காவலராக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு காவலராக நியமனம் செய்யப்பட்ட மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து காவல் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகம் வந்த காவலர் மகேஷ்குமார் அகர்வால் முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.