LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல்-அமைச்சர் விஜயை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்

Share

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். முன்னதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய்யை வைகோ சந்தித்துள்ளார். முதல்-அமைச்சரை சந்திப்பதற்கு தலைமை செயலகத்திற்கு வந்த வைகோவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் வரவேற்றனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதே சமயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் புதிய உற்பத்தி பிரிவு தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க கூடாது என முதல்-அமைச்சர் விஜய்யிடம் இன்றைய சந்திப்பின்போது வைகோ வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.