LOADING

Type to search

உலக அரசியல்

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோமென டிரம்பிற்கு மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்

Share

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோமென அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மெலோனி பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடன் புகைப்படம் எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரான்சின் ஏவியான் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் மெர்ஸ், பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு முடிந்த நிலையில், டிரம்ப் இத்தாலியைச் சேர்ந்த செய்தி நிறுவன ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், இத்தாலி பிரதமர் மெலோனி முன் வைத்த விமர்சனம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அவர் கூறியதாவது: ஜி7 மாநாட்டில் நான் அவருடன் பேசியதை கேட்டு மெலோனி அநேகமாக மகிழ்ச்சி அடைந்தார். என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மெலோனி கெஞ்சினார். அதை நான் எடுத்திருக்க மாட்டேன். ஆனால், அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது என டிரம்ப் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மெலோனி வெளியிட்ட அறிக்கையில், டிரம்ப் கூறியிருப்பது முற்றிலும் பொய். அவரது பேச்சை கேட்டதும் நான் திகைத்துப் போனேன். நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம். அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்பட்டமாகப் பொய் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நட்பு நாடுகளின் தலைவர்களிடமே இவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் எனப் புரியவில்லை என அதில் கூறியுள்ளார்.