LOADING

Type to search

உலக அரசியல்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்

Share

லெபனானில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை, ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் படையினர் லெபனானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், லெபனானின் டப்னிட் கிராமத்தில் சென்றுகொண்டிருந்த இஸ்ரேல் படையினரை குறிவைத்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.