LOADING

Type to search

இந்திய அரசியல்

ராமதாஸ் அன்புமணியை சந்தித்து பேசினார்

Share

ராமதாசை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வீட்டிற்கு நேரில் சென்று தாய் – தந்தையை சந்தித்து பேசினார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஓராண்டுக்குமேல் மோதல் போக்கு நிலவி வந்தது. இருவரும் பாமக தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக கூறிவந்தனர். மேலும், கட்சியில் முடிவெடுக்கும் உரிமை, கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்தும் இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேவேளை, கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இருவரும் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தினர். இதனால், மோதல் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், ராமதாசை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். தந்தையின் 61வது ஆண்டு திருமணநாளையொட்டி ராமதாசை குடும்பத்துடன் சென்று அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். மகன் அன்புமணி ராமதாசை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர், தாய் – தந்தையிடம் அன்புமணி ராமதாஸ் ஆசி பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், இனி நல்லது நடக்கும்’ என்றார்.