காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்
Share
காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்றார். மாநிலங்களவை தலைவரும் துணை அதிபருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தனது அலுவலக அறையில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கார்கே இந்தியில் பதவி பிரமாணம் செய்து கொண்டார். பதவி ஏற்புக்கு பிறகு அவரை சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்தினார். கார்கேயின் நீண்ட கால அனுபவத்தால் அவை நிச்சயமாக பயன் அடையும் என்றார். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, வயனாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி ஆகயோர் பதவியேற்பின்போது உடன் இருந்தனர். அவையின் தலைவராகவும் செயல்படும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மேல்சபை துணைத் தலைவர் ஹரி வன்ஷ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.















