‘கட்டா குஸ்தி 2’ படம் ஜூலை 3ம் தேதி வெளியாகிறது
Share
கட்டா குஸ்தி 2’ படம் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. கடந்த 2022-ல் வெளியான கட்டா குஸ்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள, அதன் இரண்டாம் பாகமான ‘கட்டா குஸ்தி 2’ ஜூலை 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். ரம்யா பாண்டியன், யோகிபாபு ஆகியோர் கூடுதலாக இணைந்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்
இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஜூலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.















