LOADING

Type to search

உலக அரசியல்

ஸ்பெயினில் வெப்ப அலை பரவலால் 1,028 பேர் பலியான சோகம் ஏற்பட்டது

Share

ஸ்பெயினில் வெப்ப அலை பரவலால் 1,028 பேர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதில், ஸ்பெயின் நாட்டில் வெப்ப அலை பாதிப்புகளால் மருத்துவ பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் பலர் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவநிலை மாற்றம், தொழிற்சாலை கழிவுகள் உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதுபற்றி பருவநிலை மாநாடுகளில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் அதில் பெரிய பலன் ஏற்படவில்லை. இதில், வெப்ப அலையால் ஸ்பெயினில் கடந்த ஜூனில் 1,028 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.