கவிஞர் வைரமுத்து ஞானபீட விருது பெற்றார்
Share
தமிழ் பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவுக்கு நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கி, சிறப்பிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கரன் சிங் இவ்விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார். நாடு முழுவதிலும் இருந்து இந்த விருதைப் பெறும் 60-வது இலக்கியவாதி வைரமுத்து ஆவார். தனது பிறந்தநாளன்றே இந்த உயரிய தேசிய விருதை அவர் பெற்றுள்ளார். மேலும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார். விருதைப் பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்: “இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பிறகு நோபல் பரிசு பெறத் தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா? ஏகப்பட்ட உலக அழகிகளைத் தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க மறந்ததா? ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம், இலக்கியத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது? இந்தக் கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவுசெய்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.















