காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் நோயாயல் 930 பேர் உயிரிழந்தனர்
Share
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் நோயாயல் 930 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது.
எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் காங்கோ போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்நிலையில், காங்கோவில் 2,344 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 930 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.















