LOADING

Type to search

சினிமா

பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்

Share

பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் கத்தி, எதிர்நீச்சல், கான்ஜுரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கத்தி, மான் கராத்தே, ஆம்பள உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. ஓ மை கோஸ்ட், வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன. நடிகர் சதீஷின் தந்தை நேற்று காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சதீஷின் தந்தையின் மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.