LOADING

Type to search

சினிமா

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள “டிசி” படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகிறது

Share

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாக உள்ளது.  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘கூலி’ திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  டிசி படத்தின் முன்னோட்டம் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பினை பெற்றது. டிசி’ படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.