LOADING

Type to search

உலக அரசியல்

வியட்நாமில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 18 பேர் மாயமாகினர்

Share

வியட்நாமில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 18 பேர் மாயமாகினர். வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்தனர். இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென மூழ்கத்தொடங்கியது. இதையடுத்து, கப்பல் மாலுமிகள் உதவிகோரி அவசர அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, வியட்நாம், சீனா கடற்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் விரைந்து செயல்பட்ட சீன கடற்படையினர், நடுக்கடலில் சிக்கிய 44 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய 18 மாலுமிகள் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் வியட்நாம், சீன மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.