LOADING

Type to search

இந்திய அரசியல்

இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்

Share

கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது: கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக நமது திராவிட மாடல் அரசில் அவரை நியமித்தோம். 2023-ம் ஆண்டு நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது அவர்கள் பங்களித்திருந்தார். தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆர்வத்துடனும், அதுவரை இருந்து வந்த தவறான மனச்சித்திரங்களைக் கலைத்துப் போடும் வகையிலும் அவர் கொண்டு வந்த வாளோர் ஆடும் அமலை போன்ற பங்களிப்புகளால் தமிழர் வரலாற்றுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.

தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்நாள் சாதனைகளுக்கான தக்க அங்கீகாரமாக இவ்விருது அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.