LOADING

Type to search

கனடா அரசியல்

‘Greenborough Seniors Wellness Club’ of Markham, hosted it’s Annual Summer Park Party with Sports and Entertaining Activities.

Share

மார்க்கம் நகரில் செயற்படும் ‘Greenborough Seniors Wellness Club’ நடத்திய ‘பூங்கா ஒன்றுகூடலும் பொழுது போக்கு நிகழ்வும்!

மார்க்கம் நகரில் திருமதி செல்வா அருள்ராஜசிங்கம் தலைமையில் சிறப்பாக செயற்படும் ‘Greenborough Seniors Wellness Club’ அமைப்பு நடத்திய ‘பூங்கா ஒன்றுகூடலும் பொழுது போக்கு நிகழ்வும்’ கடந்த 20-07-2026 திங்கட்கிழமையன்று மார்க்கம்- ஸ்காபுறோ ஆகிய நகரங்களுக்கு இடையிலுள்ள ‘ மிலிக்கன் பூங்கா’வில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் அமைப்பின் செயற்பாடுகளையும் அதன் தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தையும் பாராட்டி உரையாற்றிய பின்னர் தனது அலுவலகத்தின் சார்பான வாழ்த்;துப் பத்திரத்தை திருமதி செல்வா அருள்ராஜசிங்கத்திடம் ஒப்படைத்தார்.

அங்கு அறிஞர் சாமி அப்பாத்துரை மற்றும் பொறியிலாளர் கிள்ளிவளவன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பலரும் கலைஞர்களும் அங்கு கலந்து சிறப்பித்தார்கள்.
விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன . அத்துடன் மதியம் மற்றும் மாலை உணவு வகைகளை பரிமாறப்பெற்றன.

ஒட்டு மொத்தமாக அன்றைய ஒன்று கூடல் கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்வித்தது என்றால் அது மிகையாகாது.