LOADING

Type to search

சினிமா

“ரேனிகுண்டா 2” படத்தின் முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டார்

Share

ரேனிகுண்டா 2″ படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கி கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரேனி குண்டா. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியானது. இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் பன்னீர் செல்வமே தயாரிக்கும் இப்படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான, ஏகாவலியை இசையமைப்பளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இப்பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.