LOADING

Type to search

இந்திய அரசியல்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்

Share

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா வென்ற 13 தங்கப்பதக்கங்களில் 8-ஐ பெண்கள் பெற்று தந்துள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்ற 39 பேருக்கும், இப்போட்டிகளின் போது பங்களித்த இந்தியக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளிலும் இந்திய விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.